பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

மண்ணின் மைந்தர்கள்








மண்ணின் மைந்தர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ராஜ்தாக்ரேவும் அவருடைய சகாக்களும் தொடர்ந்து மும்பை, சிவசேனா, பால்தாக்ரே, மற்றும் சாருகனின் புதிய படம் மை நேம் இஸ் கான் உம். இந்தியா போன்ற பல இன மொழி கொண்ட ஒரு நாட்டிற்கு பொருந்துமா, தேவையா, நாட்டின் வளர்ச்சிக்கு இந்த கோட்பாடு உதவுமா என பல கேள்விகள் எழலாம். 80 க்கு முந்திய சோவியத் ரஷ்யாவும் தன்னுள் பல இன மொழி வேறுபாடுகளை கடந்து முன்னேறிவந்தது. ஆனால் 90க்கு பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே. 1947 இல் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டு இன்று வரை இந்த 63 ஆண்டு கால இடைவெளியில் பல இடங்களில் பல காலங்களில் இம்மாதிரியான போரட்டங்களும், கோசங்களும், ஆங்காங்கே சில வன்முறைகளும் தொடர்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதற்கு பின்புலத்தை ஆராய்ந்தால் காரணங்கள் பல உள்ளன் என உணரலாம். சுதந்திரத்துக்கு பிறகு பல தேசங்களாக உடையும் என பல வரலாற்று அறிஞர்களின் கருத்துகளுக்கு மாறாக இன்னும் ஒன்றாய்தானிருக்கிறது. ஒற்றுமையாய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒருவருக்கு உரியதை மற்றொருவர் சுரண்டும்போதோ சுரண்ட முற்படும்போதோ அல்லது இன்னொருவர் சுரண்ட வாய்ப்பை ஏற்படுதும்போதோ இம்மாதிரியான கோட்பாடுகள் எழவே செய்யும் அதிலும் உரிமையாளர் விழிப்படையும் போது மட்டும் தான். நிறைய நாடுகளில் குறிப்பாக ஆப்ரிக்கா நாடுகளில் இன்னும் மிகப்பெரிய சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது உரிமையாளர்களுக்கு தெரியாமலே அல்லது தெரியவிடாமலே. ஒருவருக்கு உரிய அடிப்படை உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத பொது இம்மாதிரியான உணர்வுகள் மேலோங்கும். அதிலும் மும்பை போன்ற பெருநகரங்களில் இவ்விடயத்தை திறமுடன் கையாளவேண்டும். சென்னையில் அண்ணா சாலையில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 90 விழுக்காடு மற்ற மாநிலதவருடையது எனில் வியபாகது.
சென்னைக்கு சொந்தக்காரர்கள் ஒதுக்கப்பட்டர்கள் அல்லது நவீன வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலாமல் ஒதுங்கிகொண்டார்கள் எனலாம். அதற்காக அனைவரையும் துரத்திவிடலாம, தாக்ரேக்கள் செயல்படும் விதம் சரிதானா என்றால் நம்மில் போரும்பலனோர் தவறு என்போம். தேசிய ஒருமைபட்டுக்காக நமது உரிமையை தியாகம் செய்ய வேண்டுமா. எனவே அவர்கள் சொல்லும் கருத்து ஏற்றுகொள்ளபடவேண்டிய, நல்ல வகையில் ஆராயப்படவேண்டிய ஒன்றுதான். இதற்காக அவர்கள் எடுத்தாளும் முறையே தவறானது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை உரியவர்கள் பாதிக்காத வகையில் ஆளும் அரசுகள்தான் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் இப்பொழுதுள்ள இந்தியா வரலாறாக மாறும் என்பதில் ஐயமில்லை.
பதிவுகள் தொடரும்....

முதல் பதிவு

நான் இதை ஏன் செய்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என் மனம் இதை செய்ய தூண்டுகிறது . இதை செய்தால் என்னை அறியாமல் ஒரு மன நிறைவை உணர்கிறேன். நீண்ட நாள் சீரிய சிந்தனைக்குப் பிறகு இதை செய்ய விளைகிறேன்.

இப்பொழுதும் இதை திறனுடன் தொடர முடிமா என தயக்கத்துடன் தொடங்குகிறேன்.

பதிவுகள் தொடரும்